Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

ஏப்ரல் 19, 2020 03:47

சென்னை: தமிழகத்தில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள கொரோரனாவால் அனைத்தும் முடங்கி போய் உள்ளது. உலகில் 23. 5 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 16,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,477 பேர் பாதிக்கப்பட்டு 15 பேர் பலியாகி உள்ளர்.

இந்நிலையில் சென்னையில் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒருவருக்கும், மற்றொரு நாளிதழில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணியில் நிருபர் ஒருவர் தங்கி இருந்த விடுதிக்கும், அந்த பகுதிக்கும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. மேலும் இருவரும் தங்கி இருந்த இடம் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டுபிடித்து சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவருக்கு நாளை (19 ம் தேதி ) முதல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:
பத்ரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து கேள்விப்பட்டு கவலையுற்றேன். உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்க வேண்டும். மன உறுதியுடன் பத்திரிகையாளர்கள் மீண்டு வருவார்கள். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்