Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர் வடிவம்!: 530 மி.கிராம் தங்கத்தில் பொற்கொல்லர் அசத்தல்

ஏப்ரல் 20, 2020 12:12

கடலூர்: கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம்தில் பொற்கொல்லர் ஒருவர் 530 மில்லி கிராம் தங்கத்தில் கோரோனா விழிப்புணா்வு வடிவத்தை செய்து அசத்தியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் தீவிரம் குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பொது நல நோக்கில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக சிதம்பரத்தில் பொற்கொல்லர் ஒருவர் 530 மில்லி கிராம் தங்கத்தில் கொரோனா விழிப்புணா்வு வடிவத்தை செய்துள்ளார்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சோ்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவா் தங்கத்தால் மிகச் சிறிய வடிவங்களை செய்வதில் ஆா்வம் கொண்டவா். இவர், இதற்கு முன் தாஜ்மஹால், நடராஜா் கோயில் பொற்சபை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட வடிவங்களை தங்கத்தால் சிறிய வடிவில் செய்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 530 மில்லி கிராம் தங்கத்தில் கொரோனா வைரஸ், முகக்கவசம், மருத்துவா், காவலா், தூய்மைப் பாணியாளரின் வடிவங்கள் மற்றும் இந்திய நாட்டின் வடிவத்தை தயாரித்துள்ளாா். 
இதைக் கண்டு வியந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் பொற்கொள்ளர்  முத்துக்குமரனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்