Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸை விட கொடூரர்கள்: ராஜநாகத்தை சாப்பிட்ட வேட்டைக்காரர்கள்

ஏப்ரல் 20, 2020 01:16

அருணாச்சல பிரதேசத்தில் காட்டுக்குள் சென்று ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொரோனா வைரஸை விட கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் ஏராளமான விஷமுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் மூன்று பேர் கொண்ட வேட்டைக்காரர்கள் குழு, 12 அடி ராஜநாகத்தை கொன்று தோள்களில் வைத்துள்ளது போலவும், சமைத்து சாப்பிடுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தங்களிடம் அரிசி இல்லை எனவும், அதனால் காட்டுக்குள் எதையாவது தேடி சென்றோம், ராஜநாகத்தை கண்டுபிடித்து கொண்டு வந்தோம் எனவும் பேசிக்கொள்கின்றனர்.

மேலும், இறைச்சியை நறுக்கி சுத்தம் செய்ய வாழை இலைகளை வைப்பது போலவும் வீடியோவில் பதிவாகியிருந்தது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோவை கொண்டு, ராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், பாதுகாக்கப்பட்ட ஊர்வன சட்டத்தின் கீழ் உள்ள ராஜநாகத்தை கொல்வது ஜாமின் வழங்க முடியாத குற்றம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்