Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் 600 வட மாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஏப்ரல் 20, 2020 01:51

கோவை: கோவை சிவானந்தா காலணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி 600 வட மாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை குழந்தைகள் பொதுநல அறக்கட்டளையோடு, வருவாய்த்துறை, காவல் துறையினர் இணைந்து  வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் ராசாமணி தெரிவித்ததாவது:

கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 127 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில், 36 பேர் குணமடைந்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் 3 பேர், சிறுமுகை பகுதியில் 2 பேர் என 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஊரடங்கு கோவைக்கு மிக அவசியமானது என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரு லட்சம் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. ஊரடங்கு முடியும் வரை தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவிகள் தேவைப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துறை துணை ஆணையர் செல்வகுமார், குழந்தைகள் பொதுநல அறக்கட்டளை நிர்வாகி மருத்துவர் செல்வராஜன், வடக்கு வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்