Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு பின் நாட்டை புனரமைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்: கமல்

ஏப்ரல் 21, 2020 06:16

சென்னை : 'கொரோனாவுக்கு பின் நாட்டை சீரமைக்கும் முக்கிய பணியில் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார்.

அவரது அறிக்கை: இந்தியாவை புனரமைக்கும் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரமில்லாமல் உயிரிழப்பவர்கள் ஆண்டுக்கு 16 லட்சம் பேர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சுகாதாரத் துறைக்கு உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் ஒதுக்க இந்தியாவில் 10 ஆண்டுகளாக ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கி நாட்டை புனரமைப்பது முக்கியமான பணி. கொரோனாவுக்குப் பின் விவசாயத் துறைக்கு மிகப்பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளனர். அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி தந்தால் மாநில வளர்ச்சியை அதிகப்படுத்தும் வாய்ப்பாக அமையும்.

எளிய மனிதனின் பிரச்னைகளையும் தேவைகளையும் கவனத்தில் வைத்து தேசத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டு கனவை நோக்கி பயணிக்கும் நேரம் இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்