Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெற்றோர் செல்போன் வாங்கி தராததால், எலி மருந்து தின்ற கல்லூரி மாணவி சாவு

ஏப்ரல் 21, 2020 09:25

மாத்தூர்: மாத்தூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் எலி மருந்தை தின்ற கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

மாத்தூர் அருகே உள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை. இவரது மகள் டீனாமேரி (17). இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் தற்போதைய  ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வந்த மாணவி டீனாமேரி தனக்கு செல்போன் வாங்கி தரச்சொல்லி தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தடை உத்தரவு காரணமாக செல்போன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கடைகள் திறந்த உடன் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட மாணவி சம்பவத்தன்று கடையில் எலி மருந்தை (விஷம்) வாங்கி தின்றுவிட்டு வீட்டிற்கு வந்து வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் அவரை அவரது பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி டீனாமேரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்