Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனியில் 4,346 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1,000 வழங்கல்

ஏப்ரல் 21, 2020 12:06

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இரவு பகல் பாராது அயராது உழைக்கும் 4,346 தூய்மை பணியாளர்களின் பணிகளை பாராட்டும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.43 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் காசோலையாக வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக தலா ரூ.1,000 வீதம் காசோலையாக வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சிப்பகுதியில் பணிபுரிந்து வரும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப்பணியாளர்கள் என மொத்தம் 300 பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போடிநாயக்கனூர் நகராட்சி நகர் நல அலுவலா ராகவன், பொறியாளர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்