Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பசியால் சுற்றும் தெரு நாய்களுக்கு, எஸ்.கே.அறக்கட்டளையினர் உணவு வழங்கினர்

ஏப்ரல் 21, 2020 12:13

திருப்பூர்: திருப்பூரில் தெரு நாய்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உணவைத் தேடி அலையும் நிலையில்  எஸ்.கே.அறக்கட்டளை சார்பில் நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ஜெயப்பிரகாசம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன், எஸ்.கே.அறக்கட்டளை ரெட்டேரியன் மேனேஜிங் டிரஸ்டி குமார் தெரு நாய்களின் பசியை போக்குவதற்காக உணவை சமைத்து நாய்களுக்கு வழங்கிவருகிறார். 
மேலும் திருப்பூர் நகரம் முழுவதும் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தினமும் விதவிதமான உணவுகளை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று சிக்கன் பிரியாணி மற்றும் பிஸ்கட் அனைத்து நாய்களுக்கும் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து எஸ். கே. அறக்கட்டளையிலன் குமார் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: மனிதர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு அளித்து வரும் வேளையில் தெரு நாய்கள் பசியால் அலைகின்றன. அதன் பசியைப் போக்கும் விதமாக தினமும் உணவு அளித்து வருகிறோம். எங்களைப்போல் பல தொண்டு நிறுவனங்கள் தெரு  நாய்களுக்கு உணவு அளித்தால் இறப்பு குறைந்து தொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்காது. மேலும் எந்தப் பகுதியிலாவது நாய்களுக்கு உணவு வேண்டுமென்றால் தங்களை இந்த  9629109621 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்  கூறினார்.

தலைப்புச்செய்திகள்