Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மே 4 முதல் சென்னையில் பஸ்கள் இயக்கம்?: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை

ஏப்ரல் 21, 2020 12:17

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை குறித்த தகவல் தற்போது மீடியாக்களுக்கு கசிந்துள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மே 4ம் தேதி முதல், பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.

நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பேருந்தில் ஏறக்கூடிய பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் உள்ளே ஏற அனுமதிக்கக்கூடாது. சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும். 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3,000க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் உள்ளன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு அவற்றில் கூட்டம் இருக்கும். இப்படியான நிலையில் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பேருந்துகள் இயக்கப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமோ என்ற எதிர்பார்ப்பும் இந்த சுற்றறிக்கையால் ஏற்பட்டுள்ளது. மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்