Saturday, 22nd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: போலீஸ் எச்சரிக்கை

ஏப்ரல் 21, 2020 01:44

சென்னை: கொரோனாவினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில், கொரோனா பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது: கொரோனாவினால், உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். டாக்டரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தியது மனிதநேயமற்ற செயல். டாக்டர் உடலை அடக்கத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்