Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு

ஏப்ரல் 22, 2020 07:24

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டு உள்ள  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு திருச்சி மண்டலத்தில் கூட்டுறவு துறையால் நகரும் பண்ணைப்பசுமை கடைகள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் சில்லரையாகவும், தொகுப்பாகவும் மக்களின் குடியிருப்பு பகுதிக்கே நேரடியாக கொண்டு சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு அடைந்து அதன் மூலம் மளிகை பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் ஏற்படும் காரணத்தினால் வருமானம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.500 விலையிலான துவரம்பருப்பு உளுந்தம் பருப்பு மிளகு சீரகம்
எண்ணெய் உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த 19 வகையான மளிகை பொருட்கள் தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பொட்டலமிடப்பட்டு மாவட்டத்தில் உள்ள 1224 ரேஷன் கடைகள் மூலம் நேற்று (புதன்கிழமை) முதல் வழங்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்