Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.500க்கு 19 வகையான மளிகைப்பொருள்: கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைப்பு

ஏப்ரல் 22, 2020 11:34

கரூர்: நியாய விலைக்கடைகளில் ரூ.500க்கு 19 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஏழை-எளிய மக்களின் உணவுக்கான தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் முதல்வர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் முதல்வர் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாதத்திற்கான உணவுப்பொருட்கள் மற்றும் ரூ.1,000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு விரிவுபடுத்தப்பட்டதின் காரணமாக மே மாதத்திற்கான உணவு பொருட்களை ஏப்ரல் மாதமே குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக 24.04.2020 மற்றும் 25.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்பட உள்ளது. அந்த டேக்கனில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சமந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது பொதுமக்களின் நலன் கருதி ரூ.500 மதிப்பில் 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத்தொகுப்பை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் நேற்று தாந்தோணிமலை மாரியம்மன் கோவில் அருகே உள்ள நியாய விலைக்கடையில் தமிழக அரசின் சிறப்பு மளிகைத்தொகுப்பை பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாண்டியராஜன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, கூட்டுறவு சங்ககளின் இனைப்பதிவாளர் காந்திநாதன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்