Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் வீடுகளில் முடக்கம்: மின்கட்டணம் கட்ட ஆள் வராமல் மின்வாரிய அலுவலகம் வெறிச்சோடியது

ஏப்ரல் 23, 2020 06:51

கரூர்: ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் மின்வாரிய அலுவலகம் மின்கட்டணம் கட்ட ஆட்கள் வராமல் வெறிச்சோடி கிடந்தது.

கொரோனா தொற்று நோயால் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கரூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இதனால் மின்சார வாரியத்தால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் அளவிடும் பணியும் நடைபெறவில்லை.

மின் கட்டணம் செலுத்த மே மாதம் 6-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து கடைசியாக செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்தவும் உத்தரவு விட்டது. மேலும் முடிந்த அளவு கூட்ட நெரிசலை தடுக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கரூர் மின்வாரிய அலுவலகத்தில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்; ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் மின் கட்டணம் கட்ட வருபவர்கள் வெகுவாக குறைந்துள்ளனர். ஆன்லைன் மூலமும் மின் கட்டணம் செலுத்துபவர்கள் குறைந்த அளவில் தான் செலுத்தி வருகின்றனர்.

கரூர் நகர் பகுதியில் கோவைரோடு, தாந்தோணிமலை, ராயனூர், வெங்கமேடு, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் காலை 8 மணி முதல் 12.30 வரையும் மதியம் 1.30 முதல் 2.45 வரையும் மின் கட்டணம் செலுத்தலாம். மேலும் இவ்வாறு இல்லா விடில் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம் என்றார்.

தலைப்புச்செய்திகள்