Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் சுற்றித்திரிந்தவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஏப்ரல் 23, 2020 03:29

தஞ்சை: “முட்டை, கருவாடு, மீன், கறி முக்கியமா? இல்லை உயிர் வாழ்வது முக்கியமா?” என,  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போது தஞ்சையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்த போலீஸார் அவர்கள் கையை நீட்ட வைத்து  விழிப்புணர்வு உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் யாரும் கூடாத வகையில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது தஞ்சை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் முட்டை, கருவாடு, மீன், கறி முக்கியமா, உயிர்தான் முக்கியம். உயிர் இருந்தால் எல்லாம் சாப்பிட்டுக்கலாம் என அறிவுரை கூறி விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க வைத்தார்.
பிடிபட்டவர்களை லத்தியால் தாக்காமல், வழக்குப்பதிவு செய்யாமல், தோப்புக்கரணம போடச் சொல்லி தண்டனை கொடுக்காமல் , நமக்கு உயிர்தான் முக்கியம், முட்டை கருவாடு, மீன், கறி முக்கியம் இல்லை என அறிவுரை கூறி வழி அனுப்பி வைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தலைப்புச்செய்திகள்