Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அல்வா கடையை திறக்க வேண்டும்: பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை

ஏப்ரல் 24, 2020 10:17

திருநெல்வேலி: அல்வா என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. திருநெல்வேலி மாநகரில் இருட்டுக் கடை அல்வா மிகவும் ருசியாக தயாரிக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

கொரோனா சுய ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைக்கு வராத காரணத்தாலும், தொடர்ந்து கடைகள் மூடப்பட்டு வருவதால் பொதுமக்கள் அல்வா என வாயில் சொல்லி எச்சில் ஊறி வாங்க முடியாமல் ஏமாந்து போகின்றனர்.

கோதுமை, மைதா, முந்திரிப்பருப்பு , நெய் , கலர் பவுடர்கள் மூலம் விதவிதமாகவும், கலர் கலராகவும் திருநெல்வேலி அல்வா தயாரிக்கப்பட்டு உலகப் பெயர் பெற்ற அல்வா என பெயர் பெற்றதாகும். குழந்தைகள், வெளிநாட்டினர்கள், முதியோர்கள், பெண்கள் என அனைவராலும் விரும்பிச் சாப்பிடும் அல்வா கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்