Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தொடரும் உதவிகள்

ஏப்ரல் 24, 2020 02:24

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தாலுகா ஒடுகம்பட்டி  ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அறம் மக்கள்  நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சு.ராஜா, மற்றும் பொதுச்செயலாளர் சு.ரமேஷ்குமார் ஆகியோர் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களின் துயரங்களை போக்கும் வகையிலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிவாரண உதவிகள், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோரின் ஆணைக்கிணங்க ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், திருநங்கைகள், விதவைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கத்தினர் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். 

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம்  கீரனூர் அருகே உள்ள ஒடுகம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஒடுகம்பட்டி காலனி, நடுப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் 500 குடும்பங்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான டாக்டர் ராஜா மற்றும் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். 

இதில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் சாகுல் ஹமீது, இளங்கோவன், பால்ராஜ், மாநில பொருளாளர் பாபு, மாநில துணைச்செயலாளர் ஏ.பி.ராஜப்பா மற்றும் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள், அறம் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்