Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் தற்போது வைரஸ் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது: அஸ்வின் காட்டம்

ஏப்ரல் 25, 2020 06:43

சென்னை: இன்று கடைகளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தொடர்பாக அஸ்வின் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை மேலும் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உடனடி அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், இன்று (ஏப்ரல் 25) காலை முதலே அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. சில கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்றாலும், பல கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவே இல்லை.

காலை முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் கூடிய கூட்டம்தான் சமூக வலைதளத்தில் பேச்சாக இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான கூட்டம் கூடியுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. இதற்குப் பலரும் தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தற்போது வைரஸ் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் வாங்கலாம் அல்லது நம்மோடு வாழும் மக்களுக்குப் பகிரலாம். அச்சுறுத்தலான காலகட்டத்தில் இருக்கிறோம்".

இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்