Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிவாரண பொருட்கள் பெற சமூக இடைவெளியின்றி முண்டியடித்த குடிசைவாழ் மக்கள்

ஏப்ரல் 26, 2020 07:56

திருச்சி: திருச்சியில் குடிசைவாழ் மக்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரண பொருட்களை சமூக இடைவெளியின்றி முண்டியடித்தபடி பெற்றுச் சென்றனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் வேலைக்கும் செல்ல முடியவில்லை. வீட்டில் சாப்பிடுவது டி.வி. பார்ப்பது தூங்குவது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். ஆனால் வீடற்ற தெருவோரவாசிகள் குடிசை வாழ் மக்கள் தினமும் சாப்பாட்டிற்காக அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சமைக்க தேவையான அரிசி காய்கறிகள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மேலப்புதூர் கெம்ஸ் டவுன் பகுதியில் குடிசைவாழ் மக்களுக்காக அரிசி காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளையும், முக கவசங்களையும் ஒரு அமைப்பினர் இலவசமாக வழங்கினர். அவற்றை பெற்றுக்கொள்வதற்காக மேலப்புதூர், கெம்ஸ் டவுன், காஜாபேட்டை பகுதியில் உள்ள குடிசைவாழ் மக்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அங்கு சமூக விலகல் ஏதுமின்றி முண்டியடித்தபடி வந்து நிவாரண பொருட்களை பெற்றுச்சென்றனர். அவர்களில் பலர் முக கவசங்கள் கூட அணிந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்