Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதவித்தொகை கிடைக்க உத்தரவு: பக்தி பாடலை பாடி கலெக்டருக்கு நன்றி தெரிவித்த முதியவர்

ஏப்ரல் 26, 2020 08:47

திருவாரூர்: உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டருக்கு பக்தி பாடலை பாடி முதியவர் ஒருவர் உருக்கத்துடன் நன்றி தெரிவித்தார்.

திருவாரூரில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் ஆனந்த் அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது 70 வயது மதிக்கத்தக்க கண் பார்வை குறைபாடுள்ள முதியவர் ஒருவர் அங்கு வந்தார். கலெக்டரை சந்தித்து பேசிய அந்த முதியவர் தான் திருவாரூர் பகுதியில் வசித்து வருவதாகவும், கண்பார்வை குறைபாட்டால் சிரமப்பட்டு வருவதாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் கோவில்களில் அன்னதானம் சாப்பிட்டு வந்ததாகவும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கோவில்கள் மூடப்பட்டிருப்பதால் அந்த உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் கலெக்டரிடம் முதியவர் கண்ணீருடன் முறையிட்டார். முதியவர் கூறியதை பொறுமையாக கேட்ட கலெக்டர் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் தாசில்தாரை அழைத்து முதியவருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த முதியவர் விநாயகனே வினை தீர்ப்பவனே என தொடங்கும் பக்தி பாடலை பாடி கலெக்டருக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்தார். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

தலைப்புச்செய்திகள்