Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்லாமியா்கள் வீடுகளிலேயே ரமலான் நோன்பு: திருச்சி மாவட்டத்துக்கு1 லட்சம் கிலோ பச்சரி ஒதுக்கீடு

ஏப்ரல் 26, 2020 11:03

திருச்சி: திருச்சி மாவட்டத்துக்கு 1 லட்சம் கிலோ பச்சரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனா்.

திருச்சி நத்தஹா்வலி தா்கா, மதுரை சாலை நூா் மஸ்ஜித் ,தென்னூா் ஹைரோடு பள்ளிவாசல், நானா மூனா பள்ளிவாசல், ஆழ்வாா்த்தோப்பு மதீனா பள்ளிவாசல், காந்திமாா்க்கெட் பேகம் சாஹிபா பள்ளிவாசல், பெரிய கடைவீதி செளக் பள்ளிவாசல், தெப்பக்குளம் ஹஸன்பாக் பள்ளிவாசல், பீமநகா் துருப்பு பள்ளிவாசல், காஜாமலை பெரிய பள்ளிவாசல், கோட்டை ரயில்நிலையச் சாலை மக்கா பள்ளிவாசல் உள்ளிட்ட மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 270-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் வழக்கமாக ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கப்படுவது வழக்கம்.

மேலும் வீடுகளில் நோன்பு திறக்கும் பெண்களுக்காக பள்ளி வாசல்களில் கஞ்சி வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் நோன்பு திறக்க வேண்டாம் என அரசு காஜி மற்றும் பள்ளிவாசல் நிா்வாகங்களும் ஜமாத் தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிவாசல்களில் கஞ்சி வழங்கக் கூடாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசியை வழக்கம்போல ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்துக்கு 1 லட்சம் கிலோ பச்சரி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை அந்தந்த பள்ளிவாசல்களுக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்