Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நோய் தொற்றால் இறந்தவர் உடல் அடக்கத்தை எதிர்த்தால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு அவசர சட்டம்

ஏப்ரல் 26, 2020 11:42

சென்னை: நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் /தகனம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

சென்னையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்வதற்கு, பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் / தகனம் செய்வதை தடுப்பதும் , தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939,பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஒராண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். இவ்வாறு அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்