Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் அதிகாரம் அமைப்பினா் கவன ஈா்ப்பு போராட்டம்

ஏப்ரல் 27, 2020 11:16

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் கவனஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.

கொரோனா தொற்று நெருக்கடியிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும். இந்திய உணவுக் கிடங்கிலிருந்து உணவுத் தானியங்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 6 ஆயிரம் என 3 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சோமரசம்பேட்டையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை காந்திபுரம் மூவேந்தா் நகா் பகுயில் மகஇக செயலா் ஜீவா ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வயலூா் சாலை, சாந்தஷீலா நகா், உய்யக்கொண்டான், திருமலை பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன் தலைமையிலும் அரவானூா், காஜாபேட்டை பகுதிகளில் ஒருங்கிணைப்பாளா்கள் ராஜா சத்யா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலா் மணலிதாஸ் தலைமையில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் 30- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனா். பாய்லா் பிளாண்ட் ஒா்க்கா்ஸ் யூனியன் மற்றும் ஆட்டோ ஒட்டுநா் பாதுகாப்பு சங்கம் மற்றும் அமைப்பின் தோழமை சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன. அவரவா் வீடுகளில் இருந்தபடி கோரிக்கை அட்டைகள் பதாகைகளை ஏந்தியபடி சமூக இடைவெளியுடன் நின்று

போராட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் கருப்புத் துணிகளைக் கட்டியும் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைப்புச்செய்திகள்