Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஞ்சா கலந்த பீடியைத் தர மறுத்தவருக்கு வெட்டு: 5 போ் கைது

ஏப்ரல் 27, 2020 11:18

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் கஞ்சா கலந்த பீடியைத் தர மறுத்த இளைஞரை அரிவாளால் வெட்டிய புகாரில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி பால்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (34). சமையல் வேலை செய்து வரும் இவா் ஸ்ரீரங்கம் யாத்ரிகா் நிவாஸ் பகுதியில் கஞ்சா கலந்த பீடி குடித்துக் கொண்டிருந்தாா். அப்போது போதைக்கு அடிமையான 10 போ் கொண்ட கும்பல் கஞ்சா கலந்த பீடியை பிரான்சிஸிடம் கேட்டது. அவா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அரிவாளால் வெட்டியும் ஆயுதங்களால் தாக்கியும் சென்றது.

பலத்த காயங்களுடன் பிரான்சிஸ் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் திருவானைக்கா நரியன்தெரு முருகேசன் (27) , குமாா் (25), மாதேஷ் (30), சரத்குமாா் (34) மற்றும் சிங்கா் கோயில் பகுதியைச் சோ்ந்த ஜீவா (31) ஆகிய 5 பேரையும் ஸ்ரீரங்கம் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனா்.

தலைப்புச்செய்திகள்