Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கல்

ஏப்ரல் 27, 2020 11:22

கும்பகோணம்: திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அ.ம.மு.க. சார்பில் ஆடுதுறை பேரூராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள் மற்றும் மதிய அசைவ உணவு ஆகியவற்றை ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்  சண்முகம், பேரூர் செயலாளர்கள் ஆடுதுறை காமேஷ், வேப்பத்தூர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், செண்பக பாண்டியன், புனித ராஜ், வக்கீல் கலையரசன், செந்தில்,  ஒன்றிய நிர்வாகிகள் சங்கர், ரமலிங்கம், வின்சென்ட், மணிமாறன், ராஜா, சிவக்குமார், ஊராட்சி செயலாளர்கள் ராமசாமி, செந்தில், ஆடுதுறை பேரூர் நிர்வாகிகள் குமரன், பெரியதம்பி, மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்