Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

ஏப்ரல் 27, 2020 12:22

கரூர்: கரூர் அருகே பசுபதிபாளையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆதரவற்றவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கரூர் பசுபதிபாளையம் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு அத்தியாவசிய தேவைக்கு பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு, புளி, மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய உணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும், தர்பூசணி பழங்கள் மற்றும் கிருமி நாசினி திரவங்களையும் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமார் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விசுவநாதன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமொழி, காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்