Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரின் மகன் பாஜகவில் இணைந்தார்

மார்ச் 12, 2019 12:02

புனே: மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரின் மகன் பாஜகவில் இணைந்தார் 
மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில் மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சி தலைவரின் மகன், பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.  

மகாராஷ்டிராவைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுஜய் விக்கி பாட்டீல். இவர், சட்டமன்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ராதாகிருஷ்ணா விக்கி பாட்டீலின் மகனும், மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகீப் விக்கி பாட்டீன் பேரனும் ஆவார். வரும் பாராளுமன்ற தேர்தலில், அகமது நகரில் காங்கிரஸ் கட்சி தனக்கு டிக்கெட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.  

இந்நிலையில் மும்பையில் உள்ள எம்சிஏ அரங்கில், பாஜக மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே மற்றும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இன்று காலை சுஜய் பாஜகவில் இணைந்தார்.  

இது குறித்து முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘அகமதுநகர் தொகுதியில் சுஜய் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமைக்கு மாநில பாஜக பரிந்துரை செய்யும். கட்சி தலைமை மறுக்காது என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் சுஜய் போட்டியிட்டால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி’ என கூறியுள்ளார்.  

சுஜய் பேசுகையில், ‘பாஜகவில் இணைவது எனது தனிப்பட்ட விருப்பம் ஆகும். எனது தந்தையின் பார்வையில் இருந்து மாறுபட்ட கோணத்தில் எனது சிந்தனை இருக்கிறது. மேலும் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எனது தந்தை போல், கஷ்ட காலத்தில்  எனக்கு உறுதுணையாக நின்றார். தற்போது பாஜகவில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறினார். 

தலைப்புச்செய்திகள்