Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1008 ஆக உயர்வு

ஏப்ரல் 29, 2020 05:52

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதுவரை 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் ஆயிரம் பலியை கடந்த 18வது நாடானது இந்தியா.

இந்தியாவில் நேற்று புதிதாக 1,903 பேருக்கு கொரோனா உறுதியானது; இதனையடுத்து மொத்த பாதிப்பு 31,361 ஆக உயர்ந்தது. புதிதாக 31 பேர் பலியானதையடுத்து மொத்த பலி 1,008 ஆக உயர்ந்தது. இதன் மூலம் உலக நாடுகளில் ஆயிரம் பலியை கடந்த 18வது நாடானது இந்தியா.

இந்தியாவில், அதிகபட்சமாக மஹா.,வில் 400 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 181, ம.பி.,யில் 120, டில்லியில் 54, ராஜஸ்தானில் 52, உ.பி.,யில் 34, ஆந்திராவில் 31, தமிழகத்தில் 25, மேற்கு வங்கத்தில் 22, கர்நாடகாவில் 20, பஞ்சாபில் 19 பேர் பலியாகி உள்ளனர். காஷ்மீர் (8), கேரளா (4), பீகார் (2), அரியானா (3), ஜார்கண்ட் (3), ஒடிசா (1), ஹிமாச்சல பிரதேசம் (2), அசாம் (1), மேகாலயா (1) என மொத்தம் 1,008 பேர் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அமெரிக்கா 57,862 கொரோனா பலியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி 'டாப் 6' ல் இடம் பிடித்துள்ளன. துருக்கி, ஈரான், சீனா, பிரேசில், கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ ஆகிய நாடுகள் ஆயிரம் பலியை கடந்துள்ளனர். இந்நிலையில், 18வது நாடாக இந்தியா, ஆயிரம் பலியை தொட்டுள்ளது.
ஆயிரம் பலியை கடந்த 18வது நாடானது இந்தியா.

தலைப்புச்செய்திகள்