Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 29, 2020 08:48

நாகை: மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நிவாரணதொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டபடி தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1000 சிறப்பு நிவாரணதொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிவாரண உதவித்தொகை பெற நாகை மாவட்டத்தில் மீன்துறை உதவி இயக்குனர் (தெற்கு மற்றும் வடக்கு) நிர்வாக எல்லைக்கு உட்பட்ட மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் மீனவர் நலவாரிய அடையாள அட்டை,  ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். தெற்கு நிர்வாக எல்லைக்கு உட்பட்ட மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் விண்ணப்பிக்க
இயலாதவர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் 99445 70804 93848 24491 ஆகிய வாட்ஸ் ஆப் எண்ணில் அல்லது மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் வடக்கு நிர்வாக எல்லைக்கு உட்பட்ட மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் சீர்காழியில் செயல்பட்டு வரும் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் 63812 35478, 81482 61788 ஆகிய வாட்ஸ் ஆப் எண் அல்லது மின்னஞ்சல்
முகவரியில் விவரங்களை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்