Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம் : சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

ஏப்ரல் 30, 2020 05:38

சென்னை,:'சென்னையில், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதால், மக்கள், ஒரே நாளில் கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம்' என, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சென்னையில், நான்கு நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்று முதல், முழு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகள், மாலை, 5:00 மணி வரை திறந்து இருக்கும். மக்கள், ஒரே நாளில் கூட்டமாக சென்று, பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

நாளையில் இருந்து, அந்த கடைகள், மதியம், 1:00 மணி வரை திறந்து இருக்கும்.அத்துடன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று, பொருட்கள் வாங்க வேண்டாம். அனைத்து பொருட்களும் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கின்றன. காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்துள்ளது. கடைகளுக்கு செல்லும்போது, கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.பொது மக்கள், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது; அங்கு யாரும் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்