Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 10 லட்சம் பேர் மீண்டனர்

ஏப்ரல் 30, 2020 06:42

உயிர் கொல்லி வைரசான கொரோனா பாதிப்பிலிருந்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டனர்.

சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகளவில் 32 லட்சத்து 19 ஆயிரத்து 240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 28 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 10 லட்சத்து 101 பேர் மீண்டனர். சிகிச்சையிலிருக்கும் 3 சதவீதம் பேர் (59,808) அபாய கட்டத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 10.64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 2.36 லட்சம், இத்தாலியில் 2.03 லட்சம், பிரான்சில் 1.66 லட்சம், பிரிட்டனில் 1.65 லட்சம், ஜெர்மனியில் 1.61 லட்சம், துருக்கியில் 1.17 லட்சம், ரஷ்யாவில் 99 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 33 ஆயிரத்து 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 79 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 8,437 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். பாகிஸ்தானில் 15 ஆயிரத்து 525 பேர் பாதிக்கப்பட, 343 பேர் பலியாகி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்