Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு காரணமாக 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைவர்: ஐ.நா பரபரப்பு அறிக்கை

ஏப்ரல் 30, 2020 10:43

கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை சாதன வசதியை இழந்துள்ளதால், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிடுமென ஐ.நா மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

உலகளவில் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் ஐ.நா மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
வருமான குறைந்த நாடுகளில், அதிகளவில் சுகாதார அமைப்புகள் மூடியிருப்பதாலும், வினியோக சங்கிலி பாதிக்கப்பட்டிருப்பதால் பெண்கள் மற்றும் சிறுமிகள் இனப்பெருக்க பராமரிப்பை குறைக்க கூடும்.கொரோனா காரணமாக 6 மாதத்திற்கு ஊரடங்கு தொடரும் பட்சத்தில், 114 குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளில் வாழும் 4.7 கோடி பெண்கள், உரிய கருத்தடை சாதன வசதிகளை பயன்படுத்த முடியாததால், 70 லட்சம் திட்டமிடப்படாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.

ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு 3 மாதத்திலும், புதிதாக 1.5 கோடி பெண்களுக்கு எதிராக பாலின ரீதியான வன்முறை நிகழ கூடுமெனவும் , அடுத்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுகள் ஏற்படும். இதனை இடையிலேயே தடுத்து நிறுத்த ஐ.நா சிறப்பு திட்டங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 1.3 கோடி சிறுமிகள், குழந்தை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படலாம். இது தொற்றுநோய்க்கு முன்னர் தடுக்கப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளது.

'ஐ.நா.,வின் புதிய அறிக்கை கொரோனா காரணமாக உலகளவில் பெண்கள் மற்றும் பெண்கள் மீது ஏற்படுத்தக்கூடிய பேரழிவு தாக்கத்தை காட்டுகிறது. தொற்றுநோய் ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது. மேலும் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் குடும்பத்தை திட்டமிடுவதற்கும், அவர்களின் உடல்களையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் திறனை இழக்க நேரிடும்' என ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குனரான நடாலியா கனெம் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்