Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மார்க்கெட்டில் 4 நாட்களில் 38 பேருக்கு கொரோனா தொற்று

மே 01, 2020 07:34

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள் மற்றும் அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கை மற்றும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மார்க்கெட் அருகே விதிமீறி சலூன் கடை நடத்தி வந்த நபருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், சலூன் கடைக்கு வந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கோயம்பேடு வியாபாரி உள்ளிட்ட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒரு அரியலூர் வியாபாரி, காவலர், கல்லூரி மாணவர் மற்றும் கொத்தமல்லி வியாபாரி மூலம் அம்பத்தூர் மண்டலத்தில் ஒரே தெருவில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

அதன்பின்னர் மார்க்கெட்டில் உள்ள பழ வியாபாரி மூலம் அவருடைய மகன் ஒருவருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 50 வயதான சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்த சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நபருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுதவிர 4 கூலித் தொழிலாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள், அவர்களால் தொற்று ஏற்பட்டவர்கள் என கடந்த 4 நாட்களில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்