Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா கட்சி வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதம் பேர் பெண்கள்

மார்ச் 13, 2019 05:42

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடனும் கைகோர்க்கவில்லை. 
 
நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்.பி.க்கள் 5 பேர் போட்டியிடவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜாதவ்பூர் எம்.பி. சுகதா போஸ் தேர்தலில் போட்டியிட அந்தப் பல்கலைக்கழகம் அனுமதி தரவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக சந்தியா ராயும், கட்சிப்பணியாற்றுவதற்காக மூத்த தலைவர்கள் சுப்ரதா பக்‌ஷியும், உமா சோரனும் தேர்தலில் நிற்கவில்லை. 

இந்த தேர்தலில் எங்கள் கட்சி 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த தேர்தலில் 35 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். இது பெண்களுக்கு பெருமைமிக்க தருணம். 

இந்த தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்கள். தற்போதைய எம்.பி.க்கள் மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் (தீபக் அதிகாரி) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 

மூத்த நடிகை மூன்மூன் சென், மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு (பா.ஜனதா) எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்