Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை உட்பட 130 சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்

மே 01, 2020 11:30

சென்னை: மத்திய அரசு கொரோனா பரவல் குறித்த ஹாட்ஸ்பாட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதில் சிவப்பு மண்டல லிஸ்டில் உள்ள சென்னை உள்பட 130 மாவட்டங்கள் உள்ளதால், இந்த மாவட்டங்கள் மே 3ம் தேதிக்கு பிறகும் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக முடங்கும் நிலை உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியா முழுவதும் 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் இந்தியாவில் அனைத்து பெருநகர நகரங்களிலும் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத்) நாளை மே 3ம் தேதி லாக்-டவுன் முடிவடைந்த பின்னரும் 'எந்த நடவடிக்கையும் இல்லாத' மண்டலங்களின் பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. இங்கெல்லாம் மே 3ம் தேதிக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். அதேநேரம் ஆரஞ்சு மண்டலங்கள் லிஸ்டில் 284 மாவட்டங்கள் உள்ளன. இங்கு ஓரளவு கட்டுப்பாடு தளர்வு இருக்கும். பச்சை மண்டலத்தில் 319 மாவட்டங்கள் உள்ளன. இங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியாக சிவப்பு மண்டலங்கள் உள்ளது. முறையே உத்தரப்பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 14, தமிழகத்தில் 12 மாவட்டஙகள் சிவப்பு மண்டலங்களாகவம், டெல்லியின் 11 மாவட்டங்கள்(அனைத்தும்) சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளை 'எந்த நடவடிக்கையும் இல்லாத' மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி இருக்காது என்று தெரிகிறது. 130 சிவப்பு மண்டல மாவட்டங்களும் முடக்கப்படும் என்று தெரிகிறது. மும்பையின் புறநகர் பகுதிகள் மற்றும் தானே, பால்கர் ஆகியவை சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.. இந்த பிரிவில் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களான புனே, நாசிக், நாக்பூர், சோலாப்பூர், யவத்மால், அவுரங்காபாத், சதாரா, துலே, அகோலா, ஜல்கான் மற்றும் ராய்காட் ஆகியவையும் உள்ளன.

உத்தரபிரதேசத்தில், டெல்லியின் என்.சி.ஆர். பிராந்தியமான கௌதம புத்த நகர் சிவப்பு மண்டலமாகவும், காஜியாபாத் ஆரஞ்சு வகையிலும் குறிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோ, ஆக்ரா, சஹரன்பூர், கான்பூர் நகர், மொராதாபாத், ஃபெரோசாபாத், புலந்த்ஷாஹர், மீரட், ரேபரேலி, வாரணாசி, பிஜ்னோர், அம்ரோஹா, சாண்ட் கபீர் நகர், அலிகார், முசாபர்நகர், ராம்பூர், மதுரா ஆகியவையும் ஆரஞ்சு மண்டலமாக வருகிறது. இதேபோல் டெல்லியின் மற்ற என்.சி.ஆர், பகுதியான குர்கான் இது ஹரியானாவின் கீழ் வருகிறது. இதுவும் ஆரஞ்சு மண்டலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்