Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு; 28 பேர் பலி

மே 01, 2020 02:38

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 01) ஒரே நாளில் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 96 வயது முதியவர் உயிரிழந்ததால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆகவும், பலி எண்ணிக்கை 28 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 203 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 117 ஆண்களும், 86 பெண்களும் அடங்கும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் தனது பேரன் மூலமாக கொரோனா பரவிய 96 வயதுடைய முதியவர், இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 9615 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 54 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1312 ஆக உள்ளது. தற்போது 1183 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்