Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பா.ஜ., சார்பில் 500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

மே 02, 2020 12:55

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர்  மண்டலம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கவிதா தலைமையில் கொரோனா நிவாரணமாக  2 லட்சம் மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய உணவு பொருட்கள் 500 குடும்பங்களுக்கு  வழங்கப்பட்டது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக திருப்பூரில்  பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர்  மண்டலம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கவிதா தலைமையில் காங்கேயம் சாலையில் உள்ள தனலட்சுமி ரைஸ் மில்லில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், கோட்ட பொறுப்பாளர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி பை, ஆயில், பருப்பு, கோதுமை மாவு, (மஞ்சள், மிளகுதூள், சேமியா 1 பாக்கெட், சோப்பு 1) மற்றும் 7 வகையான காய்கறிகள் என மொத்தம் 14 வகையான தொகுப்பு  கொண்ட அத்தியாவசிய உணவு பொருட்களை 500 குடும்பங்களுக்கு வழங்கினர். சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் காடேஷ்வரா தங்கராஜ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மண்டலத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மண்டல நிர்வாகிகள் சிவராஜ், சிவசங்கர், அர்ஜுன், கஸ்துரி, சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்