Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கத்தில் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை

மே 02, 2020 12:58

திருவண்ணாமலை: பல்வேறு இடங்களில்  கூலி வேலை செய்த 60 பேர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு வந்ததால் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஆந்திரப்பிரதேசம், சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களில் கூலி தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு 144 தடை உத்தரவை இரண்டு வாரங்கள் நீடித்ததால் செங்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சென்னையிலிருந்து சொந்த கிராமங்களுக்கு இரவோடு, இரவாக சொந்த வாகனங்களில் தஞ்சம் அடைந்தனர்.

இவர்களை மாவட்ட எல்லையில் சோதனை செய்த 60 கூலி தொழிலாளர்களை செங்கம் தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். தஞ்சம் அடைந்தவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் குழுவினர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? என்று  பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களை நகர மையப்பகுதியில் தனிமைப்படுத்தி சோதனை செய்து வருவதால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்