Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சி.ஆர்.பி.எப். பட்டாலியன் வீரர்கள் 122 பேருக்கு கொரோனா

மே 02, 2020 02:06

புதுடெல்லி: புதுடெல்லியில் கடந்த இரு வாரங்களில் 122 படைவீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் சி.ஆர்.பி.எப். பட்டாலியன் படை கொரோனா பரப்பும் மையமாக மாறியுள்ளது கவலையை அளிக்கிறது.

கிழக்கு புதுடெல்லியில் மயூர் விகார் நிலை 3ல் துணை ராணுவ படையின் (சி.ஆர்.பி.எஃப்.) 31வது பட்டாலியன் படை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதுவரை 122 படைவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் 100 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. 

புதுடெல்லியில் கடந்த வாரம் அஸ்ஸாம் பட்டாலியனைச் சேர்ந்த 55 வயது படைவீரர் ஒருவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். புதுடெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட பட்டாலியனில் மேற்கொண்ட கொரோனா சோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சில நாட்கள் கழித்து அந்த பட்டாலியனில் இருந்த 45 வீரர்களுக்கும் நோய் பரவியது. இவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப். படையில் செவிலிய உதவியாளர் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த நபருக்கு கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் கொரோனா அறிகுறிகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 24ம் தேதி 9 சி.ஆர்.பி.எஃப். படை வீரர்களுக்கு கொரோனா உறுதியானது.

இதற்கு நாளே 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இப்படியாக கடந்த இரு வாரங்களில் கொரோனாவால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பட்டாலியன் படை கொரோனா பரப்பும் மையமாக மாறிவிட்டது.

இதுகுறித்து கவனத்தில் கொண்ட உள்துறை அமைச்சகம் கொரோனா நோய் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்து விளக்கமளிக்குமாறு சி.ஆர்.பி.எஃப். படை தலைவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்