Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கை பயன்படுத்தி தோட்டம் அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஆர்வம்

மே 03, 2020 10:07

கரூர்: ஊரடங்கை பயன்படுத்தி குளித்தலையில் தோட்டம் அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் அடியோடு மாறிவிட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள சிலர் தங்கள் பொழுதை பயன் உள்ள வகையில் கழிக்க தங்கள் வீட்டில் காலியாக உள்ள பகுதியில் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கள் வீட்டில் காலியாக உள்ள இடத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து காய்கறி விதைகள், கிழங்கு வகைகள், வாழை ,தென்னை, கீரை வகைகள், பூச்செடிகள் போன்றவற்றை நட்டு தினசரி தண்ணீர் ஊற்றி வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இதில் முழு ஈடுபாடு காட்டிவருகின்றனர். சிறுவர் சிறுமிகள் வளர்த்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி அதை பேணிக்காப்பதில் மிகுந்த ஆசை கொள்கின்றனர். 

இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும் ஒரு செடியினை நட்டு வளர எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் தேவைப்படும் உழைப்பு விவசாயம் மற்றும் விவசாயியின் உழைப்பு ஆகியவற்றை தற்போது உள்ள இளைய சமுதாயம் புரிந்துகொள்ள மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதுபோன்ற பயனுள்ள பல்வேறு வகையான செயல்கள் குறித்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துகூறி புதிய விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ளவும் வீட்டில் முடங்கியே கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தம் குறையவும் அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தலைப்புச்செய்திகள்