Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள தியேட்டர் உரிமையாளர் சங்கமும் சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு?

மே 03, 2020 01:59

தமிழ்நாடு தியேட்டர்கள் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, நடிகர் சூர்யாவின் படங்களுக்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதை ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. லாக்-டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. லாக்-டவுன் நீட்டிப்பதால், தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், படங்களை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்ய படக்குழு விற்றுள்ளது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுபற்றி தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் கூறுகையில், “இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி நடிகர் சூர்யா தயாரிக்கும் படங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய படங்களை ஓ.டி.டி.யிலேயே வெளியிட்டுக் கொள்ளுமாறு கூறி விட்டோம்,” என்றார். இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். லாக்-டவுன் முடிந்த பிறகு இப்பிரச்னை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஆதரவாக, கேரள தியேட்டர்கள் உரிமையாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கேரளாவிலும் சில சிறு பட்ஜெட் படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அப்படி டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அந்த தயாரிப்பாளர்களுக்கு எதிராகவும் நடிகர் சூர்யாவின் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யாமல் புறக்கணிக்கவும் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்