Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு திட்டம்

மே 04, 2020 05:39

மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மே17 வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா விரைவு பரிசோதனைகளை மே இறுதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பரிசோதனைகள் என்ற அளவில் கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இரத்தத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் பிடி-பிசிஆர் விரை பரிசோதனைகள் கையாளப்பட உள்ளன.

சீனாவிலிருந்து அண்மையில் கொண்டு வரப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களில் சரியான முடிவுகள் கிடைக்காமல் போனதால் உள்நாட்டிலிருந்து இரு நிறுவனங்களிடமும், தென் கொரியாவிலிருந்து ஒரு நிறுவனத்திடம் புதிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் பெறப்பட உள்ளன. அடுத்து நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகள் சிவப்பு மண்டல பகுதிகளில் நடத்தப்படும்.

சென்ற ஞாயிறு காலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 10 லட்சத்து 46 ஆயிரத்து 450 பரிசோதனைகளில் 39 ஆயிரத்து 980 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகளை நடத்த 10 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தென்கொரிய நிறுவனத்திடமும் பெறப்பட உள்ளன' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்