Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான்: பூனம் பஜ்வா

மே 04, 2020 11:19

சென்னை: கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான் என நடிகை பூனம் பஜ்வா ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பளீச்சென பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில் #AskPoonam டிரெண்டாகி வருகிறது. லாக்-டவுனால் போரடித்துப் போன நடிகை பூனம் பஜ்வா, தனது ரசிகர்களுக்காக ஒரு கேள்வி பதில் செஷனை நடத்தினார். அதில், பூனம் பஜ்வாவிடம் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். மும்பையை சேர்ந்த நடிகை பூனம் பஜ்வா தெலுங்கில் வெளியான மொடாட்டி சினிமா படத்தின் மூலம் கடந்த 2005ம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பெர்மனன்ட் லைஃப் மற்றும் பாஸ் என்கிற தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர், கன்னட படமான தன்கிகாகி படத்தில் நடித்தார். மீண்டும் சில தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பூனம் பஜ்வா. அதே ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு திரைப்படம் பூனம் பஜ்வாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.

பின்னர் மலையாள சினிமாவில் பூனம் பஜ்வா காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் நினைத்த அவருக்கு, இங்கே மார்கெட் சரிந்தது. மற்ற மொழிகளில் அவர் நடித்த படங்களும் சொதப்ப தொடங்கிய நிலையில், சைடு ரோலில் நடிக்கத் தொடங்கினார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் கிளாமர் ரோலில் நடித்து வந்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் #AskPoonam எனும் கேள்வி, பதில் செஷனை ரசிகர்களுக்காக நடத்தினார். அதில், பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு நடிகை பூனம் பஜ்வா தனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்து வந்தார். சீக்கிரமே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் ஓகே ஆனதாகவும் கூறியுள்ளார்.

தளபதி ரசிகர்கள் நடிகர் விஜய்யை பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறுமாறு பூனம் பஜ்வாவிடம் கேட்க, “சட்டென கோலிவுட்டின் மாஸ்டர் விஜய் தான்” என, பளிச்சென கூறியுள்ளார். பூனம் பஜ்வா இப்படி சொன்னதை கேட்டதும், விஜய் ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். பூனம் பஜ்வாவின் தீவிர ரசிகர்கள் தாங்கள், தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தலைப்புச்செய்திகள்