Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் என்னென்ன தளர்வுகள், கட்டுப்பாடுகள்: மே 17 வரை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க மத்திய அரசு அறிவுரை

மே 04, 2020 11:38

புதுடெல்லி: நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தற்போது கணக்குப்படி இந்தியாவில் கொரோனா காரணமாக 42,533 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,391 பேர் மொத்தமாக இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இரண்டு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது மூன்றாவதாக மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை மூன்று மண்டலங்களாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களை பொறுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அவை வருமாறு:

பச்சை மண்டலம் எப்படி:
பச்சை மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பச்சை மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.
* நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* இங்கே 50 சதவிகித பேருந்துகள் எப்போதும் போல இயங்கும். ஆனால் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயங்க முடியும். பச்சை மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். 
* ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும்.
* சரக்கு வாகனம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு தேவையில்லை.
* வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* இது மட்டுமின்றி பொதுவாக லாக் டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட மற்ற அத்தியாவசிய பணிகள் அனைத்தும் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் மண்டலம் எப்படி?
 ஆரஞ்ச் மண்டலங்களில் பின் வரும் விஷயங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் மண்டலம் ஏறத்தாழ பச்சை மண்டலம் போலவே செயல்படும்.
* ஆரஞ்சு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும்.
* உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி.
* இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
* கார்கள், பைக்குகள் அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம்.

சிவப்பு மண்டலத்தில் எப்படி:
சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் சில அதிகரிக்கப்பட்டுள்ளது.
* ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். ஆனால் 33% பேர் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும்.
* உங்களிடம் பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி.
* சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.

* சிகப்பு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* இங்கு வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி இல்லை.
* இங்கும் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
* சிகப்பு மண்டலங்களில் ஊரகப் பகுதிகளில் சில தளர்வுகளுக்கு அனுமதி உண்டு.
* அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி.

* மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதி.  ஊரக பகுதியில் மட்டும் கூடுதல் கடைகளுக்கு அனுமதி.
* கார்ககள், பைக்குகள் அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம். இது மட்டுமின்றி பொதுவாக கடந்த 2 லாக் டவுன் சமயத்தில் அனுமதிக்கப்பட்ட மற்ற அத்தியாவசிய பணிகள் அனைத்தும் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்டலத்திற்கு உள்ளே கட்டுப்பாட்டு பகுதி:
சிவப்பு மண்டலத்தில் உள்ளே அதிக கேஸ்கள் இருக்கும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளுக்கு என்று மத்திய அரசு தனி விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டு பகுதி எனப்படும் கண்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் அதிக கேஸ்கள் இருப்பதால் இங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட உள்ளது. உதாரணமாக சென்னையில் ராயபுரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமடையும்.

* அதன்படி கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் அதிகரிக்கப்படும்.
* அங்கு தீவிரமான காண்டாக்ட் டிரேசிங் சோதனைகள், வீடு வீடாக செய்யப்படும் சோதனைகள் அதிகமாக இருக்கும்.
* இந்த பகுதியில் இருக்கும் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியே வரவோ அல்லது அந்த பகுதிக்குள் செல்லவோ அனுமதி இல்லை.
* மருத்துவ தேவைக்கு மட்டுமே இவர்கள் வெளியே வர முடியும்.
* இந்த கண்டெயின்மெண்ட் பகுதிக்குள் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
அனைத்து பகுதியிலும் கட்டுப்பாடு:
இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் எப்போதும் போல மூன்று மண்டலங்களிலும் சில கட்டுப்பாடுகள் வித்தியாசமின்றி தொடரும்.

* விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இயங்காது.
* பள்ளி கல்லூரிகள் இயங்காது. தங்கும் ஹோட்டல்கள் செயல்படாது.
* உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது.
* அதேபோல் மால்கள், சினிமா தியேட்டர்கள் இயங்காது. வழிபாட்டு தலங்கள் செயல்படாது.
* எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.

* மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு மேலும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது.
* எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
* அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக செயல்படும் சேவைகள்:

* மூன்று மண்டலங்களிலும் பின் வரும் அடிப்படை சேவைகள் பொதுவாக எப்போதும் செயல்படும்.
* பால் பொருட்களை பதப்படுத்துதல், பேக்கேஜிங், விநியோகம் அனுமதிக்கப்படும்.
* தேயிலை, காபி, ரப்பர், முந்திரி பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் விற்பனை அதிகபட்சம் 50 சதவீத தொழிலாளர்கள் உடன் அனுமதிக்கப்படும்.
* ஆயுஷ் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும் செயல்படும்.
* அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள், கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் செயல்படும்.

* அனைத்து விதமான விவசாய துறை நிறுவனங்களும் செயல்படும், அதாவது விவசாய உற்பத்தி, விற்பனை, விவசாய பொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்வது தொடரும்.
* மீன்பிடித்தல், கடல், உள்நாட்டு, மீன்வளத் தொழில் செயல்படும்.
* கால்நடை வளர்ப்பு பண்ணைகள், கோழி பண்ணைகள், முட்டை உற்பத்தி நிலையம் அனுமதிக்கப்படும் கால் நடை தீவன உற்பத்தி அனுமதிக்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள் காப்பகம் செயல்படும்.
* டிபிடி பணப் பரிமாற்றங்கள் வழங்கப்படும் வரை சாதாரண வேலை நேரத்தின்படி வங்கி கிளைகள் இயங்கும்.
* இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இயங்கும்.

* பராமரிப்பு இல்லங்கள், சிறார்களுக்கு பாதுகாப்பு இடங்கள், குழந்தைகள் காப்பகங்கள் இயங்கும்.
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை வழங்குதல், EPFO வின் வருங்கால வைப்பு நிதி சேவைகள் செயல்படும்.
* 15 நாட்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை விநியோகிக்க அங்கன்வாடிகள் செயல்படும். பயனாளிகள் அங்கன்வாடிகளுக்கு செல்ல கூடாது, பொருட்களை வீட்டிற்கே கொண்டு செல்ல வேண்டும்.
* ஆன்லைன் மூலம் கற்பித்தல் / தொலைதூர கற்றல் செயல்படும்.
* MNREGA எப்போதும் போல செயல்படும்.
* மத்திய, மாநில துறை நீர்ப்பாசன திட்டங்கள் எப்போதும் போல செயல்படும்.

* எண்ணெய் மற்றும் எரிவாயு துறை செயல்படும்.
* அஞ்சல் சேவைகள் செயல்படும்.
* ஐ.டி. மற்றும் ஐ.டி. தொடர்பான சேவைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.
* அச்சு, மின்னணு ஊடகம், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டி.டி.எச், கேபிள் சேவைகள் இயங்கும்.
* கிராம பஞ்சாயத்து அளவில் பொது சேவை மையங்கள் செயல்படும்.

* இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்படும். அனுமதி பெற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். கூரியர் சேவைகள் செயல்படும்.
* துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கிடங்கு சேவைகள் செயல்படும். அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்பதற்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை சேவைகள் செயல்படும்.
* சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்கள், ஹோம் ஸ்டே, லாட்ஜ்கள், மோட்டல்கள் இயங்கும்.
இவ்வாறு இந்தியாவில் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்