Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெங்களூரில் மது வாங்க குவிந்த பெண்கள்

மே 05, 2020 06:13

பெங்களூரு: கர்நாடகாவில் மதுபான கடைகள் துவக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று(மே 4) முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிபந்தனைகளுடன் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டதையடுத்து, மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். பெங்களூருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலானதுடன், கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்