Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை இந்திய ராணுவம் அளிக்கும்; தளபதி எச்சரிக்கை

மே 05, 2020 06:22

புதுடில்லி : ''ஜம்மு - காஷ்மீரில் பாக். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதற்கு உரிய பதிலடியை இந்திய ராணுவம் அளிக்கும்''என ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவானே எச்சரித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் ஹந்த்வாராவில் பாக். பயங்கரவாதிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த சண்டனையில் நம் ராணுவத்தின் ஐந்து அதிகாரிகள் உயிரிழந்தனர். இது குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளைத் துாண்டி விடுவது எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது என்பதை பாக். தன் கொள்கையாக வைத்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பாகிஸ்தானில் தீவிரமாக உள்ளது.

மருந்துகள் மருத்துவ சாதனங்கள் கிடைக்காமல் அந்த நாட்டு மக்கள் தவிக்கின்றனர். ஆனால் தன் நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத பாக். அரசு நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.பாக். அரசு மற்றும் அந்த நாட்டு ராணுவத்தின் எந்த பயங்கரவாத முயற்சிகளுக்கும் தகுந்த பதிலடியை துல்லியமான முறையில் நம் ராணுவம் அளிக்கும்.

இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் அது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது. பயங்கரவாதத்தை அது கைவிட வேண்டும்.பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் உயிரிழந்த நம் அதிகாரிகளால் ராணுவமும் இந்த நாடும் பெருமை கொள்கிறது.

தலைப்புச்செய்திகள்