Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை: டாஸ்மாக் திறப்புக்கு வைரமுத்து எதிர்ப்பு

மே 06, 2020 06:19

சென்னை: தமிழகத்தில் நாளை 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு கவிஞர் வைரமுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “டாஸ்மாக் திறப்பு என்பது 
சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை,” என்றார்.

கடந்த 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருந்தன. தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதனால் பல மாநிலங்களில் மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் திறக்காமல் இருந்தது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மதுபான கடைகளை நோக்கி எல்லை தாண்டி தமிழக குடிமகன்கள் சென்றனர்.

இதனையடுத்து தமிழகத்திலும் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் மதுபான கடைகள் திறப்பு எதிராக பதிவிட்டுள்ள பதிவு விவரம் வருமாறு:

மது என்பது - அரசுக்கு வரவு; அருந்துவோர் செலவு. மனைவிக்குச் சக்களத்தி; மானத்தின் சத்ரு. சந்தோஷக் குத்தகை; சாவின் ஒத்திகை. ஆனால், என்ன பண்ணும் என் தமிழ் மதுக்கடைகளின் நீண்ட வரிசையால் நிராகரிக்கப்படும்போது?.
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்