Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

மே 06, 2020 06:29

புதுடெல்லி: வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் மேகாலயாவில் செயல்பட்டு வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 21 ஆராய்ச்சியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.

மொத்தம் 12 ரிசர்ச் சைன்டிஸ்ட், 9 ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ என மொத்தம் 21 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். JRFக்கு மாதம் ரூ.31,000 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் சம்பள் வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ME, M.Tech அல்லது M.Sc படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், ஜியோசைன்ஸ், ரிமோட் சென்சிங், எரிகல், அட்மாஸ்பியரிக் சைன்ஸ், எர்த் சிஸ்டம் சைன்ஸ், கம்ப்யூட்டர் சைன்ஸ், சிவில் இன்ஜினியரிங், டேட்டா சைன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் படித்திருக்க வேண்டும்.

இதே போல் JRFக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல் வகுப்பில் M.Sc அல்லது M.Tech முடித்திருக்க வேண்டும். வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், ஃபாரஸ்டரி, ஜியோகிராபி, ஜியாலாஜி, ஜியோ இன்பர்மெட்டிக்ஸ், ரிமோட் சென்சிங், எகாலாஜி, எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், பிசிக்கல் சைன்ஸ் ஆகியவை படித்திருக்க வேண்டும். N-JET அல்லது GATE தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், http://recruitment.nesdr.gov.in/rs_2020/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மே 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு NESDR அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்.

http://recruitment.nesdr.gov.in/rs_2020/Advertisement_Research%20Scientist,%20Feb%202020.pdf

தலைப்புச்செய்திகள்