Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொட்டும் மழையில் குடையுடன் வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள்

மே 06, 2020 08:27


உத்ராஞ்சல்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டும் மழையிலும் குடிப்பிரியர்கள் குடையுடன் வரிசையில் மது வாங்க காத்திருந்தனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வரையப்பட்டிருந்த வட்டத்திற்குள் பொறுப்பாக நின்று அவர்கள் மது வாங்கிச்சென்றனர்.நைனிடால் நகர் மால் சாலையில் உள்ள மதுக்கடையில் ஆலங்கட்டி மழையைப் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர்.

40 நாள் ஊரடங்கிற்கு பின்னர் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே டில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் உத்தரகாண்டிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் குஷியில் மழையையும் பொருட்படுத்தாமல் மதுவை வாங்கி சென்றனர்.

தலைப்புச்செய்திகள்