Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டேன் என வதந்தி பரப்பிய போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது

மே 06, 2020 11:58

சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைதளங்களில் கூறி வந்த போலி சித்த மருத்துவர் தணிகாசலத்தை சென்னை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக யாராவது போலி தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து வந்தது. ஆனால், அதையும் மீறி கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலம் வதந்தி பரப்பி வந்தார்.

இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாதவர் என்றும் போலி சித்த மருத்துவர் என்று தமிழக சுகாதாரத்துறை அண்மையில் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. பொது மக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் அவர் செயல்பட்டு வருவதால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் சென்னை காவல்துறையிடன் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், போலி சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்