Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டில் தத்தளிக்கும் இந்தியரா?: தாயகம் திரும்ப இணையதள பதிவு விவரம் வெளியீடு

மே 06, 2020 12:07

புது டெல்லி: கொரோனா ஊரடங்கு உத்தரவால் தாய்நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியர்களை மீட்பதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா லாக்-டவுன்களால் வளைகுடா நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக, ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற பெயரில் மத்திய அரசு மிகப்பெரும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த மீட்பு நடவடிக்கையில் விமானங்கள், கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று முதல் மத்திய அரசு இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக வெளிநாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டியது குறித்த இணையதள விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: https://www.cgidubai.gov.in/covid_register/

செளதி அரேபியா: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_yyVAYPD-VYH98RNOWZkDkGKVsf34qnu0oGoLdtts3RG7_Q/viewform

மாலத்தீவுகள்: https://hci.gov.in/male/?10196?000

அமெரிக்கா: https://indianembassyusa.gov.in/reg_indian_nationals

இங்கிலாந்து: https://www.hcilondon.gov.in/news_detail/?newsid=227

மேற்கண்ட இணையதளத்தில் வெளிநாட்டில் தத்தளிக்கும் இந்தியர்கள் பதிவு செய்தால் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாட்டு துாதரகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்